Voice Of Neeya Naana Gopinath


உண்மையில் ஒரு வல்லரசு தேசத்துக்கு உரிய எல்லா தகுதிகளையும் வைத்துக்கொண்டு  அதை  அடைய வேண்டும்  என்று பேசிக்கொண்டு இருக்கி றோம். உலகத்தையே கட்டி ஆளுகிற அறிவையும் அதிகாரத்தையும்  வைத்திருக்கிற  இந்திய இளய தலைமுறை தேச வளர்ச்சி  என்ற  நீரோட்டத்தில் தன்னை நேரடியாக இணைத்துக்கொள்கிறபோது வல்லரசு என்ற அதிகாரம் தானாக வந்து சேரும் .

அடைத்துவைத்திருக்கிற ஜன்னல்களை திறந்துவையுங்கள். இந்த தேசத்தின் தெருவெங்கும் கொட்டிக்கிடக்கிற  உழைப்பையும் ஞானத்தையும் ஒன்றிணையுங்கள் . சமுகத்தின் அத்தனை தளத்தையும் சமமாக்குங்கள்..!

இத்தனை இளைஞர்  சக்தியை வைத்துக்கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்துக்   கொண்டு இருந்தால் வரலாறு நம்மைக் கேலி பேசிவிடும். பலம் படைத்தவன்தான் அதிகாரம் செய்ய வேண்டும் .உலகின் மிகபெரிய இளைஞர் சக்தியை வைத்திருக்கிற இந்தியாதான் , உலகத்தை அதிகாரம் செய்ய தகுதியான தேசம்.
இந்த நினைப்பும் நம்பிகையும் நம் அனனவரின் நெஞ்சுக்குள்ளும் ஏரியட்டும்..!

Tags: Neeya Naana , Gopinath Family,Vijay Tv Special,Interesting facts about india,interesting facts about tamilnadu,tamil story



No comments