புகை பழக்கத்தை விட ஒரு எளிய வழி
புகை பழக்கம் மோசமான பழக்கம் ஆனால் முயன்றால் அதிலிருந்து யாராலும்
விடுபட முடியும். புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு எளிய வழி உள்ளது.
அதன் படி நடந்தால் புகை பழக்கத்துக்கு ஒரு பெரிய விடை கொடுக்கலாம்.
அப்படி என்ன வழி இருக்கு என்று கேட்கிறீர்களா? இதோ …
இந்த பழக்கத்தை நிரந்தரமாக விட்டு விட வேண்டும் என்று எண்ணம் வேண்டும். இது தான் முதன்மையானது இது இல்லைன்னா புகை பிடிக்கும் பழக்கத்தை விடவே முடியாது.
புகை பிடிக்கும் போது ஒரு பெரிய மெதப்பு தோணும் அது பொய்யின்னு
(மாயை) தெரிஞ்சுக்குங்க. ஆனா புற்று நோய் வர வாய்ப்பிருக்கு, இதை மனசுல
போட்டுக்குங்க.
இனிமே புகை பிடிக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணியதும் இருக்கிற எல்லா சிகரெட்டையும் தூக்கி வீசிடனும். ஒன்னும் உங்கக்கிட்ட இருக்கக்கூடாது. தூக்கிப்போடறப்ப மனசுக்கு ரொம்ப வேதனையாதான் இருக்கும் என்ன பண்றது பழக்கத்தை விடணுமே. சிகரெட்டின் பெருமை உணர்ந்து வாய சுடுற வரைக்கும் சிகரெட்டை இழுத்தத இங்கு நினைத்து கதறக்கூடாது. நாளையில் இருந்து பிடிக்கமாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு இன்னைக்கே இருக்கிற எல்லா சிகரெட்டையும் புகைக்காதிங்க. நிறைய பேர் அப்படி தான் செய்வாங்க , நாளைக்கு நாளைக்குன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க சிகரெட் புடிக்கிறத விட மாட்டாங்க, அவங்களுக்கு நாளைக்கு வரவே வராது.
புகைப்பதை நிறுத்தியாச்சுன்னு உங்க நண்பர்கள்கிட்ட சொல்லுங்க, உடனே சில நலம் விரும்பிகள் 555 வாங்கி பத்து மச்சின்னு சொல்லுவாங்க, சில பேர் பத்த வைத்தே கொடுப்பாங்க, அந்த சதியில் விழுந்துடாதிங்க. நினைச்சிப்பாருங்க வெறும் கோல்ட் பிளேக்/சிசர்/பீடி ஒன்னு குடுன்னு கேட்டப்போ குடுத்தாங்களா? இல்லையே! இப்ப என்ன கரிசனம்??? ( கொடுத்தாலும் அடுத்த நாளே கடன் காரன் மாதிரி உங்களை வாங்கி தர சொல்லிடுவாங்கல்ல)
நண்பர்கள் கூட போகும் போது அவர்கள் 1 பாக்கட் வாங்கி உங்கக்கிட்ட 1 சிகரெட் எடுத்துக்க சொல்லி நீட்டுவாங்க , பழக்கத்தில் எடுத்து பத்த வச்சிறாதீங்க. வேண்டாம்! சிகரெட்டை விட்டாச்சுன்னு சொல்லிடுங்க.
இப்படி பல பல தடைகளையும் மீறி வெற்றிகரமா ஒரு வாரம் சிகரெட் புகைக்காம இருந்திங்கன்னா உங்களை பாராட்டி ஒரு டம்ளர் பழரசம் அருந்துங்க, முடிந்தா உங்கள் நண்பர்களுக்கும் வாங்கி கொடுங்க.
ஒரு வாரம் கழித்து சிகரெட் பத்த வைக்க ஆசை வரும். ஒன்னு மட்டும் யாருக்கும் தெரியாம அப்படின்னு சொல்லிட்டு சிகெரெட்டை கையில் எடுக்காதிங்க. அப்புறம் விட முடியாது.
சில சமயம் அடுத்தவர்கள் சிகரெட் புகைப்பதை பார்த்தா ரெண்டு இழுப்பு இழுக்க தோனும் இந்த மாதிரியான நேரங்கள் தான் மிக முக்கியமானது. இது ஒரு 4 அல்லது 5 நிமிடங்களுக்கு இருக்கும், இந்த நேரத்தில் மனதை வேறு திசையில் செலுத்தி புகைக்கும் எண்ணம் தோன்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். டீ, காபி, பழரசம் குடிங்கள் அல்லது புகைக்கிற ஆளை திட்டுங்கள் ( மனசுக்குள் தான் ) அந்த 5 நிமிடம் போய் விட்டால் புகைக்கும் எண்ணமும் போய் விடும்.
புகை பிடிக்காம 1 மாசம் ஓட்டிட்டீங்கன்னு வைங்க உங்களை நீங்களே
பாராட்டி 1 பழரசம் குடிங்க, முடிந்தா உங்கள் நண்பர்களுக்கும் வாங்கி
கொடுங்க.
இதே மாதிரி ஒரு 3 மாசம் ஓட்டுங்க., உங்களை பாராட்டி 1 பழரசம் குடிங்க. காசு இருந்தா நண்பர்களுக்கு வாங்கி கொடுங்க. ஆனா பழரசம் குடிக்கற பழக்கத்தை விடாம தொடருங்க.
உங்களால புகைக்காம இருக்க முடியும்ன்னு தெரிஞ்சி போச்சு, அப்புறம் என்ன புகை பழக்கத்துக்கு பெரிய கும்பிடு தான். உங்களுக்கு வாழ்த்துக்கள்.
அப்புறம் மறக்காம புகை பிடிக்கும் உங்க நண்பர்களை திருந்த சொல்லுங்க.
Tags: how to leave smoking habits,smoking is good for health,smokers in tamilnadu,i love smoking, girls smoking in college, girls smoke in bar,tamil girls smoking, i hate who smoke in public, smoke , politicians smoking

No comments
Post a Comment