My Beautiful College Life
நந்தா இன்ஜினியரிங் காலேஜ் ECE-2010
நம்மை Albert Einstein-களாக மாற்ற முயன்ற புரொபஸர்கள்
நம்மை கட்டுக்கோப்புடன் நடத்த முயன்று வெற்றிக்கனியை பறிக்காத HOD
பிறந்த குழந்தையை அரவணைக்கும் தாயைப்போல நம்மை அரவணைத்த நம் நண்பர்கள்
பரீட்சைக்கு முந்தைய இரவு நாம் நடத்திய பட்டிமன்றங்கள் மற்றும் அரட்டை அரங்கங்கள்
வெட்டிக் கதைகளும் இணைய தளமுமாக நாம் கழித்த அர்த்தமற்ற சிவராத்திரிகள்
நல்ல உணவிற்காக பொறுத்து பின் போராடி மாற்றிய உணவு விடுதி
சனி ஞாயிறுகளில் பல்கூட துலக்காமல் நாம் உண்ணும் ‘மயக்க’ பிரியாணி
கூட்டம் கூட்டமாக ஒரே அறையில் நாம் கண்டுகளித்த வண்ணமயமான திரைப்படங்கள்
ஆறு மாதத்திற்கு ஒருமுறை நெறிப்படுத்திய Semester Exam
வீட்டிற்கு செல்ல அங்கங்கே நாம் ஒதுக்கும் ‘சின்னஞ்சிறு’ விடுமுறைகள்
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் Cellphone-ல் விடிய விடிய நாம் ‘வறுத்த’ கடலைகள்
எப்போதுமே கடைசி நாளில் நாம் சமர்ப்பிக்கும் Recordகள், Assignment-கள்
நிலஅதிர்ச்சியாலும் சுனாமியாலும்கூட அசைக்க முடியாத நம்மை அதிர வைத்த Anna University Result-கள் நாமிட்ட தேவையற்ற சச்சரவுகளும் அதில் இருந்து கற்ற கசப்பான பாடங்கள்
நள்ளிரவில் ஆள் அரவமில்லாத சாலைகளில்காற்று வாங்க நாம் சென்ற Walking-கள்
ஆயிரம் அடித்துக் கொண்டாலும் கடைசியில் ஒற்றுமையாக நாம் நடத்திய Symposium
மூன்றே மாதங்களில் முடிக்க வேகவேகமாய் நாம் செய்து ‘வாங்கிய’ Project-கள்
போருக்கு வியூகம் அமைப்பது போல் அமைத்து நாம் அடித்த பார்த்த Cinema-கள்
உலகம் சுற்றும் வாலிபர்களாக நாம் சுற்றிக் களித்த சுற்றுலா
வைத்திருக்கும் எல்லா Equipment-யும் பொசுக்கி நாம் செய்த Lab வகுப்புகள்
கஜினி முகமது போல வேலைக்காக விடாமுயற்சியுடன் நாம் ஏறி இறங்கிய Company-கள்
Arrear உறுதியானாலும் தன்னம்பிக்கையோடு நாம் நிரப்பும் 44 பக்க விடைத்தாள் என்று எல்லாமே இப்போது திரும்பி பார்த்தால் “குறும்பு” செய்தது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும் இவையெல்லாம்
தான் எனக்கு “வாழ்க்கையை” சொல்லி கொடுத்தது.
Miss U My Dear Friends
2 comments
Vow nice work.. Really it vl remarkable memory for u pplz... Wo done tis great work??? Hats Off to u!!! Great
Machi good work da.... keep going da....
Post a Comment