Socrates - Greek philosopher who taught by asking questions.
கிரேக்க நாட்டில் உள்ள
ஏதென்ஸ் நகரில்
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.(கிமு
470 – கிமு
399).
கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல்
தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். இவர்
மேற்கத்திய தத்துவ
மரபின்
முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர்.
இவருடைய சீடர்
பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார்.
சாக்ரட்டீசிய முறை(Socratic
method) அல்லது
எலன்க்கோசு (elenchos) முறை என
அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே,
மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது
முக்கியமான பங்களிப்பாகும். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல்
அல்லது
நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால்
பொதுப்படையான தத்துவஞானத்தினதும் தந்தையும், ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டு வருகிறார்.
சிறிது
காலம்
இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப்
பணியில் ஈடுபாடு இல்லாததால் வேலையை
விட்டு
வெளியேறினார்.
சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது, செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.
சிறுவனாக இருந்த
போதே
சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த
வழக்கம் அவர்
வளர
வளர
வளர்ந்தது.
எதைப்பற்றியும் கேள்வி
கேட்டு,
அது
பற்றிய
உண்மையை அறிந்துகொள்வதே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாயின.
பொது
இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக
நேரங்களை சாக்ரடீஸ் செலவிட்டார்.
ஆனால்
மற்றவர்கள் சக்ரடீஸீடம் கேள்வி
கேட்டால் அதற்கு
நேரடியாகப் பதில்
சொல்வதை அவர்
தவிர்த்தார்.
ஏதாவது
ஒரு
பிரச்சினையை மையமாக்க் கொண்டு
மக்களிடம் கேள்வி
மேல்
கேட்டு,
அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு,
அந்தப்
பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.
பிரச்சினையின் காரணத்தைத் தமது
கேள்வியின் மூலம்
உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப்
பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார்.
இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு
பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப்
போக்குவதற்குச் செய்ய
வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர்.
இதனால்,
ஏதென்ஸ் மக்கள்
தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு
கிடைக்கும் என்று
நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண்
போகவில்லை.
சாக்ரடீஸின் இந்தக்
கேள்வி
கேட்கும் முறை
ஏதென்ஸ் நகர
இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி
தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.
அனிடஸ்
என்ற
அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற
கலைஞனும், லைகோன்
என்ற
மேடைப்
பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது
வழக்குத் தொடுத்தனர். இதற்கு
சாக்ரடீஸ் மீது
அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும்.
இளைஞர்களைத் தூண்டி
விடுவதாகவும், மத
எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை
சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான
வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன்
வழியாக
ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை
விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது
அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.
நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளிதான் என்று
தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன
தண்டனை
கொடுக்க வேண்டும் என்பதை
சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர்.
தாம்
எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம்
தாய்
திருநாட்டிற்குத் தமது
செயல்களின் மூலம்
நன்மையே செய்ததாகவும், அதன்
பொருட்டு இந்த
நீதிமன்றம் நமக்குத் தண்டணைக்குப் பதிலாக
பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ்.
ஆனால்
தண்டனை
வழங்குவதாக இந்த
நீதி
மன்றம்
முடிவு
செய்தால், அது
அபராதத் தொகையாக இருக்க
வேண்டும் என்றும்; அந்த
அபராதத் தொகையைத் தமது
நண்பர்கள் அரசுக்குச் செலுத்த தயாராக
இருப்பதாகவும் நீதி
மன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார்.
சாக்ரடீஸ் தமது
செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று
நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.. அதற்கு
மாறாக
அவர்
நீதிமன்றத்தில் வாதங்களை முன்
வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால்
நீதிபதிகள் சாக்ரடீஸூக்கு மரண
தண்டனையை அறிவித்தனர்.
நீதிமன்ற விசாரணையின் போது
சாக்ரடீஸ் செய்த
மூன்று
சொற்பொழிவுகள் அவருடைய அறிவு
விசாலத்தையும் அஞ்சாமையையும், வெளிப்படுத்துவதாக அமைந்தது.
சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவருடைய நண்பர்
கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸைச் சந்தித்து, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனை
கூறினார். அதற்கு
வேண்டிய ஏற்பாடுகளைத் தாம்
செய்வதாகவும் கூறினார். அதற்கு,
“நான் தப்பிச் செல்வது பொது
மக்களின் கருத்துகளுக்கும், என்
மீது
தொடுக்கப்பட்ட தவறான
குற்றச்சாட்டுகளுக்கும் நான்
பணிந்து விட்டதாக ஆகிவிடும். அத்துடன் என்
வாழ்நாளில் நான்
கொண்டிருந்த கொள்களைகளுக்கும் எதிராக
அமைந்ததாகும்.
நீதிமன்ற விசாரணையின்போது, நான்
சாவைக்கூட சந்திக்க தயார்;
மன்னிப்புக் கேட்க
முடியாது , என்று
கூறி
சாக்ரடீஸ் தப்பிச்செல்ல மறுத்ததுடன், சாவை
எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்.
சாக்ரடீஸூக்கு மரண
தண்டனையை நிறைவேற்றும் நாள்
வந்தது…
அவருடைய கால்
விலங்குகள் அகற்றப்பட்டு, விஷம்
கொடுக்க வேண்டும் என்பது
நீதிபதிகளின் தீர்ப்பு.
இறுதியாக சாக்ரடீஸைக் காண்பதற்கு அவருடைய நண்பர்களும், மனைவி
தம்
குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.
சாக்ரடீஸின் இறுதி
முடிவைக் காணச்
சகிக்காது அவருடைய மனைவி
அழுது
துடித்தாள்.
மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த
பின்,
சாக்ரடீஸின் விலங்குகள் அகற்றப்பட்டன. மெதுவாகத் தம்
கால்களை சாகரடீஸ் பிணைந்து கொண்டார்.
அப்போது தாம்
நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப்
பெரிய
சிறைச்சாலை அந்த
உடலிருந்து நமது
உயிர்
தாமாக
தப்பிவிட முடியாது. உடம்பு
என்ற
சிறையிலிருந்து உயிர்
விடுதலையாவது பேரானந்தம்!” என்று
தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.
“மரணத்தைச் சந்திக்கும் வேளையில் அதிகமாகப் பேசக்
கூடாது”
என்று
விஷம்
கொடுக்கும் பொறுப்பில் இருந்த
அதிகாரி சாக்ரடீஸிடம் சொன்னான். ஆனால்
அவர்
அது
பற்றிக் கவலை
கொள்ளாமல் நகைச்சுவையுடன் நண்பர்களிடம் பேசிக்
கொண்டிருந்தார்.
இறுதியாக சாக்ரடீஸ் குளித்து முடித்தார்.
“மரணத்திகுப் பின்
உங்களை
எப்படி
சவ
அடக்கம் செய்ய
வேண்டும்?” என்று
நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள்.
அதற்கு,
“நீங்கள் எப்படிச் செய்தாலும் எனக்கு
மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ்.
சிறை
அதிகாரி ஒரு
கோப்பை
விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்.( hemlock poisoning.)
நண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
Tags: who is socrates, philosophy of socrates , story about socrates , socretes,
1 comment
It is very useful
Post a Comment